ரூ. 250 கோடியில் விவசாயிகள் பாதுகாப்பு திட்டம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
ரூ. 250 கோடி மதிப்பில் உழவர் சமூக பாதுகாப்புத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின உரையில்அறிவித்துள்ளார்.
நாட்டின் 59வது சுதந்திர தின விழா தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதாஏற்றி வைத்து உரையாற்றினார்.
முன்னதாக போர் நினைவுச் சின்னத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா, கோட்டை கொத்தளத்தில்அமைந்துள்ள 150 அடி உயர பிரமாண்டமான கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் உரையாற்றுகையில், தனது ஆட்சியின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலைமனதில் வைத்து உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார்.
ஜெ. உரை விவரம்:
ரூ. 720 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் அமைத்தல், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஆகியவைபள்ளிக் கூடங்களில் ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தமிழகம் கல்வித்துறையில் முன்னிலை வகிக்கிறது.
இதுதவிர புதிய அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமது கிராமம் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் மூலம்மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டது. சுதந்திரம் என்ற வார்த்தைக்கு முழுமையான, உண்மையான அர்த்தம்கொடுக்கும் திட்டங்களை எனது அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர ஆண்டுக்கு ரூ. 420 கோடி செலவில் உழவர் சமூக பாதுகாப்புத் திட்டத்தை எனது அரசு செயல்படுத்தவுள்ளது. 18வயது முதல் 60 வயது வரையிலான 1 கோடியே 37 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்தத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் செலுத்த வேண்டிய தலா 10 ரூபாயையும் தமிழக அரசே செலுத்தி விடும். இந்தத் திட்டத்தின்கீழ் உறுப்பினராக உள்ள விவசாயத் தொழிலாளர்கள் விபத்தில் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம்நிதியுதவி வழங்கப்படும்.
விபத்தில் உடல் உறுப்பு இழப்பு ஏற்பட்டால், இழப்பின் தன்மைக்கு ஏற்ப ரூ. 1லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அந்தஉறுப்பினர், விபத்து அல்லாமல் இயற்கையான முறையில் உயிரிழந்தால் ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.
ஈமச் சடங்கு செலவுக்காக ரூ. 2,500 வழங்கப்படும். உறுப்பினரின் மகன் 10வது படித்தால் ரூ. 1,000, 11வது படித்தால் ரூ.1,500 வழங்கப்படும். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கிப் படித்தால் ரூ. 1,750வழங்கப்படும்.
மாணவியாக இருந்தால் ரூ. 2,000, ரூ. 2,250 வழங்கப்படும். முதுகலைப் பட்டப்படிப்பு படிப்போருக்கு, மாணவராகஇருந்தால், ரூ. 2,500ம், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவருக்கு ரூ. 3,000ம், மாணவியாக இருந்தால் முறையே ரூ. 3,500வழங்கப்படும்.
உறுப்பினர்கள் திருமணம் செய்து கொண்டாலும், அவர்களது பிள்ளைகள் திருமணத்தின் போதும் திருமண உதவித் தொகைவழங்கப்படும். ஆண்களுக்கு ரூ. 3,000ம், பெண்களுக்கு ரூ. 5,000ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
தாய்மார்களின் பிள்ளைப் பேருக்கு ரூ. 2000 உதவித் தொகையாக வழங்கப்படும். கருச்சிதைவு, கருக்கலைப்புக்கும் உதவித்தொகை வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 200 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றார்ஜெயலலிதா.
கல்பனா சாவ்லா விருது பெற்ற மீரா:
முன்னதாக காவல்துறையினர் மற்றும் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீரா என்ற பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருதை ஜெயலலிதாவழங்கினார்.
சுனாமி தாக்குதலில் சிக்கி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டபோதும், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் ஏராளமானபேரை கடல் அலையிலிருந்து காப்பாற்றிய தீரச் செயலுக்காக மீராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications