இன்று கதிர்காமர் உடல் தகனம்: பலத்த பாதுகாப்பு
கொழும்பு:
சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை அமைச்சர் கதிர்காமரின் உடல் தகனம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நார்வே மற்றும்பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலரால்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தக் கொலைக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கதிர்காமரின் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்திய இலங்கை போலீஸார் ஒரு பெண் உட்பட 12தமிழர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சில சிங்களர்களிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
கொல்லப்பட்ட கதிர்காமரின் உடல் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது உடல் தகனம் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு எதிரே உள்ள பூங்காவில் முழு அர சு மரியாதையுடன் இன்றுநடைபெறுகிறது.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியா, நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தஅமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், பாதுகாப்புத் துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட பெரும் முயற்சி எடுத்து வரும் நார்வேநாட்டின் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் பீட்டர்ஸன் மற்றும் துணை வெளியுறவுத் துறை அமைச்சர்விடார் ஹெல்ஜெஸன் ஆகியோர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
கதிர்காமரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நார்வே அமைச்சர்கள் 2 நாட்கள் கொழும்பில் தங்கி, இலங்கைஅரசு அதிகாரிகளுடன் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கதிர்காமரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியையொட்டி கொழும்பில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications