தீவிரவாதம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் அட்வைஸ்
டெல்லி:
இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் இணைந்து செயல்பட்டு புதிய இந்தியாவைஉருவாக்குவோம் என்று இன்று காலை டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டின் 59வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில்பிரதமர் மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்குஉத்திரவாத மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும். வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதின் மூலம் தான் வறுமையைஒழிக்க முடியும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காத வரை நாம் முழு சுதந்திரம் பெற்றுவிட்டதாக கூற முடியாது.
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்துபராமரித்தால் தான் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி போன்றவற்றை போக்க முடியும்.
உலகிலேயே நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். நாம் எதிலுமே இரண்டாவதாக இருக்கக்கூடாது. முதலாவது இடத்தை நோக்கியே நமது சிந்தனை இருக்க வேண்டும்.
தற்போது உலகம் முழுவதும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. இதை நாம் ஒடுக்கியே ஆக வேண்டும். தீவிரவாதிகளைஒடுக்குவதில் பாகிஸ்தான் முழு அக்கறை காட்ட வேண்டும். இந்த விஷடத்தில் அரை மனதுடன் செயல்பட்டால் எந்த பலனும்கிடைக்காது.
மக்களுக்கும், அரசுக்கும் இடையே தற்போது வேலி எதுவும் இல்லை. எனவே நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டு விரைவில்புதிய இந்தியாவை உருவாக்கி சாதனை படைப்போம் என்றார் பிரதமர்.
முன்னதாக காந்தி சமாதி, ஜவகர்லால் நேரு சமாதி, லால் பகதூர் சமாதி மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின்சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டைக்கு வந்தார்.
செங்கோட்டையில் பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வரவேற்றார். பின்னர் முப்படைகளின்அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.
சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், குஜ்ரால், தேவ கெளடா,நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியும், பல்வேறுமாநிலங்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications