பெட்ரோல் டேங்கர்கள் மூலம் தாக்குதல்: அல் கொய்தா திட்டம்
லண்டன்:
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பெட்ரோல் டாங்கர்களைக் கடத்தி அதன் மூலம் பயங்கர தாக்குதல் நடத்த அல் கொய்தாதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது விமானங்களை கடத்திஅல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் சுமார் 3,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்.உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதல் நடந்து வருகிற செப்டம்பருடன் 4 வருடங்கள் முடிகிறது. இதையொட்டிமீண்டும் தாக்குதல் நடத்த அல் கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த முறை அமெரிக்கா தவிர இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத் துறைஅதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இம் முறை தற்கொலைப் படை மூலம் பெட்ரோல் டாங்கர்களை கடத்தி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலுள்ள முக்கிய வர்த்தகமையங்கள் மீது தாக்குதல் நடத்தி இரு நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
உலக வர்த்தக மைய தாக்குதல் நடந்து வரும் செப்டம்பரில் 4 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் இதையொட்டி அந்த சமயத்தில்மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அமெரிக்க உளவுத் துறையினர் கூறுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications