சென்னையில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
சென்னையில் இன்று 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போனில் மிரட்டல்விடுத்தவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னையிலுள்ள செயின்ட் ஜோஸப் பள்ளிக்கு இன்று காலை 8 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசியவன் பள்ளியில்வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போனை வைத்து விட்டான்.இது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் மோப்ப நாயுடன் விரைந்து வந்து வகுப்பறைகளில்சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. காலை நேரம் என்பதால் வெடிகுண்டு புரளியால்அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்த கையோடு வீட்டுக்கு கூட்டிச் சென்றுவிட்டனர்.
இந் நிலையில் சென்னையிலுள்ள மேலும் சில பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சூளையிலுள்ள ஆன்ட்ரூஸ்மேல்நிலைப் பள்ளி, சிந்தாதிரிப் பேட்டை தனக்கோட்டி பள்ளி, அயனாவரம் தாராப்பூர் பள்ளி, பெனடிக்ட் பள்ளி உட்பட 9பள்ளிகளுக்கு இதே போல வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதனால் இந்தப் பள்ளிகளில் பெரும் பீதி ஏற்பட்டது. இது குறித்து கேள்விப்பட்டது பெற்றோர்கள் பதட்டமடைந்து பள்ளிக்குவந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 10 பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போனில் மிரட்டல்விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications