ஆளுனரின் சுதந்திர தின விருந்து: திமுக கூட்டணி, ஜெ. புறக்கணிப்பு
சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி ஆளுனர் பர்னாலா அளித்த வரவேற்பு விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் புறக்கணித்தன.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில், அரசியல் கட்சிகள், முக்கியப் பிரமுகர்களுக்காக தேநீர் விருந்துஅளிக்கப்பட்டது. பர்னாலாவும், அவரது மனைவி சுர்ஜித் கவுரும் இந்த விருந்தை அளித்தனர்.இந் நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து, முன்னாள் ஒரிஸ்ஸா மாநில ஆளுனர் எம்.எம்.ராஜேந்திரன், அமைச்சர்கள்பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் நாராயணன், டிஜிபி அலெக்சாண்டர், சென்னைமாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், ஆற்காடு இளவரசர் நவாப் அப்துல் அலி, சென்னை துணை மேயர் கராத்தேதியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முற்றிலுமாக புறக்கணித்தனர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் வரவில்லை.
அதேபோல முதல்வர் ஜெயலலிதா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் வரவில்லை.
பர்னாலாவை தமிழகத்துக்கு ஆளுநராகக் கொண்டு வந்த திமுக இப்போது அவர் மீது ஆத்திரத்தில் இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் உள்பட பல்வேறு விஷயங்களில் ஜெயலலிதா அரசை அவர்கண்டிக்கவில்லை என்ற கோபத்தில் திமுக கூட்டணி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications