பி.இ. இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தை தீர்ப்பை எதிர்த்து மனு- ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு கோர உரிமை கிடையாது என்றுஉச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.

தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மத்திய, மாநில அரசுகளுக்குஇட ஒதுக்கீடு கிடையாது என்று 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரச் சொல்லி மத்திய அரசை நெருக்கவும் திமுக கூட்டணி முடிவுசெய்துள்ளது.

பாமகவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனைதொடர்பு கொண்டு பேசியுள்ளார். மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, அன்புமணி ஆகியோர் நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடுவிவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந் நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இப்போது இட ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் படிக்கும்போது, தனியார்கல்லூரிகள் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை எனத் தெரிய வருகிறது.

இந்தத் தீர்ப்பு அனைத்துத் துறைகளிலும் சமதர்ம சமுதாயத்தைக் காண வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராக உள்ளது.இனிமேல் உயர் கல்விக்கு தனியார் கல்லூரிகளின் தயவையே நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகும்.

இதைத் தவிர்க்க உறுதியான கொள்கை விதிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியம். இதற்கு, அரசியல் சாசனச் சட்டத்தின்66 மற்றும் 25வது பிரிவுகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்டுள்ளநிலையை சரி செய்ய இதுவே சரியான நேரமாகும்.

தனியார் சுய நிதிக் கல்லூரிகள் மாநில அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலேயேமாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்ற விதிமுறைகளையும் அந்த திருத்தத்தில் சேர்க்கலாம்.

கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு, 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மாணவர் சேர்க்கையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படும்.

எனவே இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். தெளிவானவிதிமுறைகளை வகுக்காவிட்டால், உயர் கல்வி நிர்வாகத்தை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் மாணவர்கள் நலன் கருதி தனியார் கல்லூரிகளை அரசுடமையாக்க எனது அரசு ஒருபோதும் தயங்காது. எனதுநிலையையும், அரசின் கொள்கையையும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் உறுதியாகவும், தெளிவாகவும் தெரிவித்துவிட்டேன்.

உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு:

இதற்கிடையே இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ராஜ்ய சபாவில்பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பால் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் கூறினர்.

ராஜ்யசபாவில் இன்றைய விவாதத்தின் போது முதன் முதலாக ஏ.கே. அந்தோணி இந்தப் பிரச்சினையை எழுப்பினார். இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனை பாதுகாக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கு பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்சோரி கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துதீவிரமாக ஆராய்ந்த பிறகு தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+