ஜெ.வின் உழவர் பாதுகாப்பு திட்டம்: திமுகவின் திட்டம் உல்டாவா?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின உரையின்போது அறிவித்த உழவர் பாதுகாப்புத் திட்டம், திமுகஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்த திட்டம் என்று திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம்கூறியுள்ளார்.
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, ரூ. 250கோடியில் புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தார்.இத் திட்டம் குறித்து திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகஆட்சியில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை ரத்துசெய்து விட்டுத்தான், அதேபோன்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நல வாரியத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்துகுறிப்பிடப்படவில்லை. ஜெயலலிதா அறிவித்துள்ள திட்டத்தில் அது மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே கடந்த 2000மாவது ஆண்டிலேயே திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தைத்தான் பெயர்மாற்றி புதிய திட்டமாக கூறியுள்ளார் ஜெயலலிதா.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் விவசாயத் தொழிலாளர் நல வாரியத் திட்டத்தைஅதிமுக ஆட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு விவசாயிகளைச்சேர்க்காமல், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது அதிமுக அரசு.
இப்போது புதிய திட்டம் போல திமுகவின் திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இதுகண்டனத்துக்குரியது. ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தைகளை மூடினார்ஜெயலலிதா.
இப்போது திமுகவின் திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை விவசாயிகள் மன்னிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமலிங்கம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications