தீவிரவாதிகளை ஒடுக்க கோவைக்கு புதிய கமாண்டோ படை
கோயம்பத்தூர்:
கோவை மாநகரில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்டுபிடித்து ஒடுக்க புதிய கமாண்டோ படைஅமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர காவல்துறைபலப்படுத்தப்பட்டது. தற்போது கோவை மாநகரில் ஐ.ஜி. அந்தஸ்தில் காவல்துறை ஆணையர் செயல்பட்டுவருகிறார்.தீவிரவாதிகள் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக அங்கு காவல்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்கவும், தீவிரவாதிகளின் செயல்பாடுகளைக் கண்டுபிடித்துவேரறுக்கவும் புதிய அதி விரைவுப் படையை அமைக்க மாநகர காவல்துறை, மேற்கு மண்டல ஐ.ஜிக்குபரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரை டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், ஒரு இன்ஸ்பெக்டர், 1 சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய கமாண்டோ படையைகோவையில் அமைக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், எந்த விதமான சூழ்நிலைகளையும்சமாளிக்கும் வகையிலான பயிற்சிகளையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளித்து பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசின் உள்துறையும் அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து இந்த கமாண்டோபடை விரைவில் உருவாக்கப்படவுள்ளது.
இந்தப் படையில் இடம் பெறுவோருக்கு சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படை பயிற்சிமையத்தில் தீவிர பயிற்சி அளிக்கப்படும். இந்தப் படையில் வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்ட சிறப்புஅதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள் இடம் பெறக் கூடும் என்று தெரிகிறது.
கமாண்டோ படையின் தலைவராக சென்னை மாநகர தலைமையக துணை ஆணையர் கருப்புசாமிநியமிக்கப்பட்டுள்ளார். இவர் வீரப்பனை ஒழித்துக் கட்டிய சிறப்பு அதிரடிப்படையில் பல காலம் பணியாற்றியவர்ஆவார்.
பதட்டமான நேரங்களில் கமாண்டோ படை பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படும். இப்படையில் கூடுதலாகவீரர்களை பின்னர் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை ஆணையர் கரன் சின்ஹாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலைத்தெரிவித்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications