சேது சமுத்திரப் பணிகளை சீர்குலைக்க சதி: வெடிகுண்டுகளுடன் 3 பேர் கைது
தூத்துக்குடி:
சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் கோடியக்கரை பகுதியில் மண் தோண்டும் பணியை சீர்குலைக்கும் விதமாக வெடிகுண்டுகளுடன்பதுங்கியிருந்ததாக தூத்துக்குடியில் 2 பேரும், ராமேஸ்வரத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் படுகொலையைத் தொடர்ந்து தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில்போலீஸாரும், கடலோரக் காவல் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு விடுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடித்து கியூ பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர்.
விடுதியை முற்றுகையிட்ட அவர்கள் ஒரு குறிப்பிட்ட அறையில் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்குதூத்துக்குடியைச் சேர்ந்த ரோக் பெர்னாண்டோ என்பவர் இருந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தான் சேதுசமுத்திர கால்வாய்த் திட்ட எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார்.
அவரது அறையை போலீஸார் சோதனையிட்ட போது குழாய் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. 5டெட்டனேட்டர்குச்சிகளும் சிக்கின. இதைத் தொடர்ந்து போலீஸார் ரோக் பெர்னாண்டோவைக் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தூத்துக்குடியைச் சேர்ந்தநெடுங்கிள்ளி என்பவரின் மகன் சிவராஜ் தான், பெர்னாண்டோவுக்கு வெடிகுண்டுகள் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்தவெடிகுண்டுகளை ராமேஸ்வரத்தில் உள்ள மாரி, மனோலோ ஆகியோர் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல பெர்னாண்டோதிட்டமிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக சிவராஜை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பெர்னாண்டோ மீனவர் ஆவார்.தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர். சேது கால்வாய் திட்டம் தமிழக மீனவர்கள் நலனுக்கு எதிராக உள்ளதாக கருத்துஎழுந்தபோது சேது சமுத்திரத் திட்டத்திற்கான எதிரான இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார் பெர்னாண்டோ.
இதற்காக சிலருடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தின் மண் அள்ளும் பணியை தடுத்து நிறுத்த அவர்கள் முடிவு செய்தனர்.இப்பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கவும் அவர்கள் தீர்மானித்தனர். இதற்காக மனிதவெடிகுண்டாக மாறவும் அவர்கள் தயாரானார்கள்.
பெர்னாண்டோ கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பெர்னாண்டோவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்துஅவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications