அமெரிக்கா: இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் சுட்டு கொலை
ஹூஸ்டன்:
இந்தியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்துபோலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹூஸ்டனிலுள்ள ஒரு பைப் தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் பிரிவில் என்ஜினியராக பணி புரிந்து வந்தவர் அகில் சோப்ரா(வயது 28). இந்தியாவைச் சேர்ந்த இவர் சில இந்து அமைப்புகளில் உறுப்பினராக இருந்து வந்தார்.சோப்ரா, தன்னுடன் பணி புரியும் சக ஊழியர்களுடன் ஹூஸ்டனிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.இந் நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன் சோப்ரா பணி முடிந்த பிறகு நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால் அவரது நண்பர்கள் சோப்ராவை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது ஹூஸ்டன் நகரிலுள்ள ஒரு பூங்காவில்சோப்ராவின் கார் நிற்பதை பார்த்தனர். காரின் அருகே சென்று பார்த்த போது சோப்ரா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சோப்ராவின் உடலைக் கைப்பற்றினர்.விசாரணையில், பணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
கொலையாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட அகில் சோப்ரா கடந்த 4 வருடங்களுக்கு முன் தான் அமெரிக்கா சென்றார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.சமீபத்தில் தான் தனக்கு பெண் பார்க்கும்படி பெற்றோர்களிடம் இவர் கூறியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications