டி.கே.பட்டம்மாள், இளையராஜாவுக்கு விருது
சென்னை:
கர்நாடக சங்கீத மேதை டி.கே.பட்டம்மாள், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட 31 பேருக்கு விர்ச்சுவோசா விருதுவழங்கப்படுகிறது.
இந்தியாவின் கிராமி விருது என்று இசையுலகினரால் செல்லமாக அழைக்கப்படுவது விர்ச்சுவோசா விருது. பிரபல கர்நாடகஇசைக் கலைஞர்களான சசிகிரண், செளம்யா ஆகியோர் இணைந்து ஏற்படுத்தியுள்ள கர்நாடிகா.காம் நிறுவனம் மூலம் இந்தவிருது வழங்கப்படுகிறது.கர்நாடக இசை, திரை இசை, பாப் இசை, மெல்லிசை உள்ளிட்ட பல்வேறு இசைப் பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது.விருது விழா குறித்து சசிகிரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு 31 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. இதுதவிர வாழ்நாள் சாதனை விருதும் உள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு நேரடி ஆய்வு, கருத்துக் கணிப்பு, மார்க்கெட் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மூலமாகவிருதுக்குரியவர்களை தேர்வு செய்துள்ளோம். கிராமி விருதுகளைப் போல, கலைஞர்களின் சமீப கால இசைத்தொகுப்புகளுக்குக் கிடைத்துள்ள வரவேற்பையும் கருத்தில் கொண்டு விருது பெற்றவர்களைத் தேர்வு செய்துள்ளோம்.
கர்நாடக இசைப் பிரிவில் டி.கே.பட்டம்மாளுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது. இந்துஸ்தானி இசையில், கிராமிவிருது பெற்ற விஸ்வ மோகன் பட்டுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது.
திரை இசையில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது. மற்ற இசைப் பிரிவுகளுக்கானவிருதுகள் விழாவின்போது அறிவிக்கப்படும் என்றார் சசிகிரண்.
விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 19ம் தேதி காமராஜர் நினைவு அரங்கில் நடைபெறும். இந்த விழாவின்போது இசைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications