கோவையில் 20,000 வங்க தேசத்தினர் ஊடுருவல்: பாஜக புகார்
கோயம்புத்தூர்:
கோவையில் 20,000 வங்கதேசத்தினர் ஊடுருவியுள்ளதாகவும் அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்றும் பாஜகதலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்
அவரது பேட்டி விவரம்:தமிழகத்தில் மீண்டும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அராஜகம் ஆரம்பமாகிவிட்டது. மதுரையில் இந்து இயக்கத்தைச்சேர்ந்த காளிதாஸ் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கோவையில் பாஜக தொழிற்சங்க அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன்தீவிரவாதிகள் புகுந்து தாக்கியுள்ளனர்.
இதை முளையிலே அரசு கிள்ள வேண்டும். கோவையில் மீண்டும் வெடிகுண்டு சம்பவம் நடந்துவிடாமல் தடுக்க வேண்டும்.கோவையில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்குவதை கண்டித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஎச்பி, பாஜக தொண்டர்கள் பங்கேற்பர். வங்க தேசத்தினர் இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக ஊடுருவி வருகின்றனர். தமிழகத்திலும், குறிப்பாக கோவையில் மட்டும் 20,000 பேர் ஊடுருவி இருப்பதாகஎங்களுக்கு தகவல் வந்துள்ளது.
இவர்கள் அகதிகளாக அல்ல, சட்டவிரோதமாக வந்தவர்கள். வந்ததோடு இங்குள்ள முகவரியில் ரேசன் கார்டும்பெற்றுவிட்டனர். இவர்களால் கோவை நகரின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்படப் போகிறது.
எனவே இவர்களை உடனே வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் அணையின் நீர் மட்டத்தை 145 அடியாக உயர்த்த கேரளத்துடன் தமிழக அரசு பேச வேண்டும். இதை வலியுறுத்திவரும் 23ம் தேதி மதுரையில் இருந்து கம்பத்துக்கு பாத யாத்திரை செல்கிறேன்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜெயலலிதா பல சலுகைகளை அறிவித்து வருவதில் எந்தத் தவறும் இல்லை. இப்படி அறிவிக்கக்கூடாது என்று எந்த சட்டத்திலாவது கூறப்பட்டுள்ளதா? என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications