பிடிவாதத் தாய்; சிறையில் தந்தை.. பரிதவிக்கும் குழந்தைகள்
மதுரை:
சென்னையைச் சேர்ந்த ஜனகராஜன் என்பவர் கடந்த பல மாதங்களாக மதுரை சிறையில் வாடி வருவதால் அவரது 2 பெண்குழந்தைகளும் தங்களது தாத்தாவின் வீட்டில் வசித்து வருகிறார்கள். குழந்தைகளின் தாயார் மாலினி, கணவர் ஜனகராஜன் மீதுஜெர்மனி, இலங்கை மற்றும் சென்னை நீதிமன்றங்களில் தொடுத்துள்ள வழக்குகளால் ஜனகராஜன் விடுதலை ஆவது தடைபட்டுவருகிறது.
ஜெர்மனியில் உணவு விடுதி நடத்தி வந்தவர் ஜனகராஜன். அவர் இலங்கையைச் சேர்ந்த மாலினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாலினியின் நடத்தை சரியில்லை என்று சொல்லிஜனகராஜன் அவரைப் பிரிந்தார்.தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடந்த 2002ம் ஆண்டு இலங்கை வழியாக ஜனகராஜன் இந்தியாவுக்கு வந்தார்.சென்னையில் உள்ள தனது பெற்றோரிடம் குழந்தைகளை ஒப்படைத்தார். பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருகுழந்தைகளையும் சேர்த்துப் படிக்க வைத்தார்.
இந் நிலையில் தனது கணவரைக் காணவில்லை என்று கூறி ஜெர்மனி நீதிமன்றத்தில் மாலினி வழக்கு தொடர்ந்தார். மேலும்,குழந்தைகளை கடத்திச் சென்று விட்டதாக கூறி இலங்கை போலீஸிலும் மாலினி புகார் கொடுத்தார்.
மாலினி வழக்குகள் போட்டதை அறிந்த ஜனகராஜன் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இலங்கை செல்லமுடிவு செய்தார். இலங்கை செல்வதற்கு அவர் தவறான வழியைத் தேர்வு செய்தார்.
ஆம், கள்ளத்தோணி மூலம் குழந்தைகளுடன் இலங்கை செல்ல முயன்றார். ஆனால், பாம்பன் போலீஸாரிடம் அவர் சிக்கிக்கொண்டார்.
இதுதொடர்பாக ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஜனகராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகள் இரண்டும்அவரிடமிருந்து பிரிக்கப்பட்டு தாத்தாவின் வீட்டிற்கு (சென்னைக்கு) அனுப்பி வைக்கப்பட்டன. இந் நிலையில் ஜாமீன் கோரிராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஜனகராஜன் விண்ணப்பித்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்கும் நிலை உருவானது.
இச் சூழ்நிலையில் இலங்கையிலிருந்து சென்னை வந்த மாலினி, ஜனகராஜனுக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்ற உயர்நீதிமன்றம் ஜனகராஜனுக்கு ஜாமீன் தருவதற்குத் தடை விதித்தது.
இந்த நிலையில் மாலினியின் இரு குழந்தைகளும் தாயிடம் செல்ல விருப்பமில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளன.இதனால் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மாலினியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம்நிராகரித்து விட்டது.
இதனால் குழந்தைகளை திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனது கோரிக்கையை மாலினியால் நிறைவேற்றிக் கொள்ளமுடியவில்லை. இருப்பினும் ஜனகராஜன் மீதான ஜாமீன் ஆட்சேபத்தை அவர் கைவிடாத காரணத்தால் தொடர்ந்து பலமாதங்களாக அவர் மதுரை மத்திய சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்.
மேலும், ஜெர்மனி, இலங்கை, ராமேஸ்வரம், சென்னை என பல்முனை வழக்குத் தாக்குதல்களில் சிக்கித் தவித்து வருகிறார்ஜனகராஜன். எப்போது தந்தையைப் பார்ப்போம் என்ற ஏக்கத்தில் அவரது இரு குழந்தைகளும் சென்னையில் உள்ள தங்களதுதாத்தா வீட்டில் பரிதவித்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications