வருது தேர்தல்.. வருது இலவச சைக்கிள்... ஜெவின் புதிய சலுகை
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ்டூ படிக்கும் அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் இந்த ஆண்டு முதல் இலவசசைக்கிள்கள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்குதால் சலுகை மழையை ஆரம்பித்துள்ள ஜெயலலிதா, நாளொரு புதிய அறிவிப்பை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் இப்போது மாணவர்களுக்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு மட்டும் இலவசசைக்கிள்களை தமிழக அரசு வழங்கி வந்தது. இந்தத் திட்டத்தை மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி சமீபத்தில் முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் தவிர அனைத்து சமுதாயப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவ,மாணவியர்களுக்கும் நடப்பாண்டு முதல் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பிளஸ் ஒன், பிளஸ்டூ மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுவதைப்போல தங்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்க வேண்டும் என்று சமுதாயத்தின் ஏனைய பிரிவு மாணவர்கள் கோரிக்கைவைத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டு முதல் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் அனைத்து சமுதாயப் பிரிவுகளையும் சேர்ந்தமாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதன் மூலம் 6.14 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 110.52 கோடி மதிப்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும்.
பிளஸ்டூ படிப்பை முடித்த பிறகும், பல்லாண்டுகளுக்கு இலவச சைக்கிள்களைப் பயன்படுத்தி நன்றாகப் படிக்க வேண்டும்என்பதால் இந்த சைக்கிள்களை மாணவ, மாணவியர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சைக்கிள்களை பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகளில்சைக்கிள் நிறுத்தங்களை கட்டுமாறும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications