வெனிசுவேலா விமான விபத்தில் 160 பேர் பலி
காரகஸ்:
வெனிசுவேலாவில் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 160 பேர் பலியாயினர்.
தென் அமெரிக்க நாடான பனாமாவில் இருந்து பிரஞ்சு கரீபியன் தீவான மார்டினிக் தீவுக்கு அந்த விமானம் சென்றுகொண்டிருந்தது. மெக்டோனல் டக்ளஸ்-82 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது இரண்டுஎன்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி அனுமதி கோரினார். ஆனால், அடுத்த பத்தாவது நிமிடத்தில்அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கிவிட்டது.
கொலம்பியா எல்லைக்கு அருகே இந்த விபத்து நடந்தது. இதில் விமானத்தில் இருந்து 160 பேரும் பலியாகிவிட்டனர்.விமானத்தின் சிதறிய பாகங்களும் உடல்களும் கொலம்பியா மற்றும் வெனிசுவேலா எல்லைப் பகுதியில் பல கி.மீ. தூரத்தில்சிதறிக் கிடக்கின்றன.
பலியான அனைவருமே பிரஞ்சு நாட்டவர் ஆவர்.
கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள இரண்டாவது மிகப் பெரிய விமான விபத்து இதுவாகும். கிரீஸ் நாட்டின் விமானம் சிலநாட்களுக்கு முன் திடீரென வெடித்துச் சிதறி அதிலிருந்த நூற்றுக்கும் அதிகமான பயணிகள் பலியாயினர்.
அந்த விமானத்தின் ஏர்-கண்டிசனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விஷ வாயு பரவி விமானிகள் மயங்கியதால்விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications