பையில பணம்.. வகுப்பில் இடம்- ராமதாஸ் காட்டம்
சென்னை:
எந்த விதமான விதிகளையும் பின்பற்றாமல் கையில காசு, வாயில் தோசை மாதிரி காசை வாங்கிக் கொண்டு சீட்களை கூவிக்கூவி விற்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து விசாரிக்க உயர் மட்டக் குழு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதை வலியுறுத்தி வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கி அவை தன்னிச்சையாக செயல்பட உச்சநீதிமன்றத்தின் சமீபத்தில் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்கள் உண்மையிலேயே அற நோக்குடன்தான் நடத்துகிறார்களா? இவர்களது கட்டணக் கொள்ளையும் கட்டாய நன்கொடை கொள்ளையும் ஊரறிந்தது.
சுய நிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. அங்கு இடங்கள் விற்கப்படுகின்றன. இது நாடறிந்த ரகசியம்.கையில காசு.. வாயில தோசை மாதிரி பையிலே பணம், வகுப்பிலே இடம் என்பது தான் இந்தக் கல்லூரிகளில் எழுதப்படாதசட்டம்.
நன்கொடை வசூலிக்கக் கூடாது.. வாங்கினால் தண்டிக்கப்படுவீர் என்று ஆண்டுதோறும் அறிவிப்பும் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. இதை யாரும் மதித்ததும் இல்லை. தவறு செய்தவர்கள் மீது சட்டம் பாய்ந்ததும் இல்லை.
பல கல்லூரிகள் அரசுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுள்ளன. இது யார் சொத்து.பொதுச் சொத்து தானே. பொதுச் சொத்து எப்படி தனியார் கல்லூரிகளுக்கு சொந்தமானது?
இந்தக் கல்லூரிகளுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் உள்ளன. அதில் தான் மாணவர்கள் வந்து செல்ல வேண்டும் என்றுகட்டாயப்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள். இந்த வாகனங்களுக்கு அரசு வரி விதிக்கிறதா?
இந்தக் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏராளமானவை. அவற்றைக் கண்டுபிடித்து தவறுகளைக்களைய உயர் மட்டக் குழுவை அசு நியமிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு என்ற சமூகக் கடமையை அமலாக்க மாட்டோம் என்று அடம்பிடிக்கும் இந்தக் கல்விக் கொள்ளையர்கள் அரசின்பொதுச் சொத்தை, நிலத்தை வளைத்துப் போட்டு அனுபவிக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications