ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு: பிரேம்குமாரிடம் ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்தஎஸ்.பி. பிரேம்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல்காணவில்லை. தனது மனைவி காணாமல் போனது குறித்து குளித்தலை போலீஸில் கணவர் ஜோதி ராமலிங்கம் புகார்கொடுத்தார். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆள் கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் குளித்தலை அதிமுகஎம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன், உறவினர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்ஜோதி ராமலிங்கம்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றக் கிளை குற்றவாளி யார் என்றுஉடனடியாக கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றக் கிளை பல முறை காலக்கெடுவை நீட்டித்தும்இன்னும் போலீசாரால் மீனாட்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சமீபத்தில் ஜோதி ராமலிங்கம், அவரது அண்ணன் பசுபதி, ரங்கநாதன், ஆசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் பெங்களூரில்வைத்து உளவியல் ரீதியிலான லை டிடெக்டர் சோதனைகளும் நடத்தப்பட்டன.

ஆனால் மீனாட்சி மாயமான வழக்கில் முக்கிய சந்தேகத்துக்கு இடமாகியுள்ள அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்திடம் மட்டும்போலீசார் இந்தச் சோதனையை நடத்தவில்லை.

இதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அவரிடமும் லை டிடெக்டர்சோதனை விரைவில் நடத்தப்படும் என போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

இந் நிலையில் இவ்வழக்கில் சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்துஜெயேந்திரரை அதிரடியாகக் கைது செய்து நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய முன்னாள் காஞ்சிபுரம் காவல்துறைக்கண்காணிப்பாளரான பிரேம்குமார், மீனாட்சி காணாமல் போன வழக்கின் நேரடி விசாரணை அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் எஸ்.பி. பதவியிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட பிரேம்குமார் தற்போது சிபிசிஐடியில் உள்ளார். நீண்ட காலமாகஇழுத்துக் கொண்டுள்ள மீனாட்சி வழக்கை அவர் விசாரிக்க உள்ளார்.

அவரது தலைமையில் தற்போது புதிய கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

மற்றொரு திருப்பமாக, சென்னையிலிருந்து ஜோதி ராமலிங்கத்திற்கு ஒரு மர்மக் கடிதம் வந்துள்ளது. மீனாட்சி எழுதுவது போலஅக்கடிதத்தில் வாசகங்கள் உள்ளன. அதில்,

அன்புள்ள மாமாவிற்கு, வரும் 4ம் தேதிக்குள் என்னை அழைத்துச் சென்று விடுங்கள். இல்லாவிட்டால் இவர்கள் ஏதாவதுசெய்து விடுவார்கள். பண விஷயத்திற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னதான் இருந்தாலும் நீங்கள் அப்படியெல்லாம்பேசியிருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனாட்சி சென்னையில் தங்க வைக்கப்பட்டுள்ளாரா, எங்கிருந்துஅவர் இக்கடிதத்தை எழுதினார் என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இக்கடித்தில் உள்ள கையெழுத்து மீனாட்சியுடையது அல்ல என்று ஜோதி ராமலிங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.மீனாட்சி என்னை ஒருபோதும் மாமா என்று கூப்பிட மாட்டார். வேறு யாரோ ஒருவர்தான் இதை எழுதியுள்ளார்.

என்னை இந்த வழக்கில் குற்றவாளியாக சித்தரிக்க போலீஸார் நாடகமாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த தபாலைஅனுப்பிய கூரியர் நிறுவனத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஒருவர் வந்து, ஜோதி ராமலிங்கத்திற்கு வந்த கடிதத்தை அனுப்பிவிட்டீர்களா என்று கேட்டுள்ளார்.

எனவே இது போலீஸாரே திட்டமிட்டு அனுப்பிய கடிதம். இதற்கும், மீனாட்சிக்கும் தொடர்பு இல்லை என்று உறுதியாகநம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜோதி ராமலிங்கம்.

சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை ஆஜராக வைத்து நிஜ குற்றவாளிகளுக்கு கிலியை ஏற்படுத்தி, அதைப்பயன்படுத்தி உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்தார் பிரேம்குமார். அதே பாணியில், மீனாட்சி வழக்கிலும் அவர்விசாரணையை தொடங்கியிருக்கலாம் என்பதையே இக்கடித விவகாரம் காட்டுகிறது.

பிரேம்குமாரிடம் வழக்கு வந்திருப்பதால், உண்மையான குற்றவாளி யார் என்பது வெகு சீக்கிரமே தெரிய வரும் என்று சிபிசிஐடிவட்டாரம் நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+