கல்லூரி விழாக்களில் சினிமா பாட்டுக்கு ஆட தடை!
சென்னை:
கல்லூரி விழாக்களில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவியர் நடனம் ஆடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், புதிதாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவியருக்கான கல்விக் கடன்வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விஸ்வநாதன் பேசுகையில்,முன்பெல்லாம் படிப்பதற்கு வங்கிக் கடன் பெறுவது மிகவும் சிரமமமான காரியமாக இருந்தது. ஆனால் இப்போது அது மிகவும்எளிதாகக் கிடைக்கிறது. ரூ. 4 லட்சம் வரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வங்கிகள் கடன் தர ஆரம்பித்துள்ளன.
தங்களை பெற்றோர்கள் சிரமப்பட்டு படிக்க வைக்கிறார்கள் என்பதை மாணவ, மாணவியர் உணர்ந்து நன்றாகப் படிக்கவேண்டும்.
தற்போது பல்வேறு பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் கலை விழாக்களின்போது சினிமா பாடல்களுக்கு மாணவ,மாணவியர் நடனம் ஆடுவது அதிகரித்து வருகிறது. கலை விழா தான் என்றாலும் சினிமா பாடலுக்கு ஆட வேண்டியஅவசியமில்லை.
இந்த ஆட்டம், பாட்டத்தால் மாணவ, மாணவியரின் படிப்பு தான் பாதிக்கப்படுகிறது. இந்த நடன நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்டஒரு மாதம் வரை மாணவ, மாணவியர் பயிற்சி எடுக்கிறார்கள் என்றும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
எனவே இனிமேல் தமிழக பொறியியல் கல்லூரிகளில் இதுபோல பாடல்களுக்கு நடனம் ஆட தடை விதிக்கப்படுகிறது. மேலும்உடைக் கட்டுப்பாட்டையும் மாணவ, மாணவியர் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்களுக்குஉத்தரவிட்டுள்ளேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் செல்போன்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உடைகள் அணிவதிலும்சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், உடனடியாக டி.சிகொடுத்து அனுப்பி விடுவோம் என்றார் விஸ்வநாதன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications