நான் விவசாயிகளின் முதல்வர்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நான் முன்னாள் (Former) முதல்வர் அல்ல, விவசாயிகளின் (Farmers) முதல்வர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தென் மாநிலங்களில் புதிதாக 40 லட்சம் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகளை வழங்குவதற்கான தொடக்க விழாசென்னையில் நடந்தது. இவ் விழாவில் கருணாநிதி, கர்நாடக முதல்வர் தரம்சிங், புதுவை முதல்வர் ரங்கசாமி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செல்போன் இணைப்புகளைத் தொடங்கி வைத்த கருணாநிதி, தனது அருகே அமர்ந்திருந்த தரம்சிங்குடன் செல்போனில்பேசினார். அப்போது, தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீரைத் தராமல் கர்நாடகம் முரண்டு பிடிப்பதாக அவர் புகார் கூறினார்.

இதைக் கேட்ட தரம்சிங், இதுகுறித்து உடனடியாக கவனிப்பதாக சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

கருணாநிதியின் புகாரையும், அதற்கு தரம்சிங் அளித்த பதிலையும் கேட்ட அங்கிருந்தவர்கள் வெடிச் சிரிப்பில் மூழ்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், என்னை இங்குள்ளவர்கள் முன்னாள் முதல்வர் என்று கூறுகிறார்கள். ஆனால்உண்மையில் நான் விவசாயிகளின் முதல்வர்.

இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாளாகும். இன்று முரசொலி மாறனின் 71வது பிறந்த நாள். இந்த நாளில்அவரது புதல்வர் தயாநிதி மாறன், அருமையான இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் தருகிறது என்றார்.

திமுக விருதுகள் அறிவிப்பு

இதற்கிடையே திமுக சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, பாரதிதாசன், கலைஞர் விருதுகள்பெறுவோரின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் செப்டம்பர் 17ம் தேதி நடகும் திமுக முப்பெரும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான பெரியார் விருது பெற திருத்துறைப்பூண்டி டி.எஸ்.கல்யாணசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணாவிருது புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது முனைவர்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் வழங்கப்படுகிறது.

கலைஞர் விருது கங்கைகொண்டான் ஆ. கருப்பையாவுக்கு வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+