உழவர் பாதுகாப்பு திட்டம்: ஜெவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள உழவர் பாதுகாப்புத் திட்டம் விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பாகும் என்று தமிழகவிவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் தலைவர் விஜயன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கடந்த 2001ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியம் சட்டப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.இந்த வாரியத்தில் 80 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வாரியத்தின் செயல்பாடுகளை அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது. தொடர்ந்துஇந்த வாரியம் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் 1 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பார்கள்.
தற்போது நல வாரியத்தை மூடி விட்டு புதிதாக உழவர் பாதுகாப்புத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுவிவசாயிகளை ஏமாற்றும் வேலையாகும் என்றார்.












Click it and Unblock the Notifications