மீனவர்கள் மீது கடற்படைத் வெறி தாக்குதல்!
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்படை வீரர்கள்வெறித் தாக்குதல் நடத்தி, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் 20 லிட்டர் டீசலை பறித்துச் சென்றனர்.
இவர்கள் இந்தியக் கடற்படையினரா அல்லது இலங்கைக் கடற்படையினரா என்று தெரியவில்லை.வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் குப்புராஜ், அனந்தகுமார் ஆகிய இரு மீனவர்களும்மீன் பிடிப்பதற்காக சென்றனர். கோடியக்கரை அருகே நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒருஇயந்திரப் படகில் கடற்படை வீரர்கள் வந்தனர்.
மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள் இரு மீனவர்களையும் திடீரென தாக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்கள் மற்றும் 20 லிட்டர் டீசல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
படுகாயம் அடைந்த இரு மாணவர்களும் தத்தித் தடுமாறி கரைக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்களை மற்ற மீனவர்கள்நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். இதுதொடர்பாக கீழையூர் காவல் நிலையம் மற்றும்மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்களா அல்லது இலங்கை கடற்படையினரா என்பது அந்தமீனவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
இச் சம்பவம் குறித்து போலீஸாரும், மீனவளத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications