ஜெ ஜோதிடர், ஜெயேந்திரர் வழக்குகள் மாற்றம்
சென்னை:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கோவிலில் சிவன் சன்னதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பதிவாகியுள்ள 4 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமை நீதிபதி தலைமையிலானடிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
திருக்குறுங்குடி கோவிலில் இருந்த சிவன் சன்னதியை ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கரின்ஆலோசனையின்படியும், ஜெயேந்திரர் உத்தரவின் பேரிலும் கோவில் நிர்வாகம் இடித்துத் தள்ளியது. இதுதொடர்பாக திவ்யதேசமக்கள் சபையின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஜெயேந்திரர், உண்ணி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். திருக்குறுங்குடி விவகாரம்தொடர்பாக மொத்தம் 4 வழக்குகள் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன.
இந் நிலையில் ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீதான புகார்களை போலீஸார் சரிவர விசாரிக்கவில்லை என்று கூறி திவ்யதேசமக்கள் சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
(இந்த விவகாரத்தில் ஜெயேந்திரரை விசாரித்தால் உண்ணியையும் விசாரிக்க வேண்டும் என்பதால் போலீஸார் இவ்வாறுநடந்து கொண்டதாகத் தெரிகிறது)
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீதான புகார்களைப் பதிவு செய்து விசாரிக்குமாறுதமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயேந்திரர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்து மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை வாங்கினர்.
இந் நிலையில், திவ்யதேச மக்கள் சபை சார்பில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தடையை நீக்குமாறு கோரி முறையிடப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதி குலேசகரன்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை கிளையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள்உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை வருகிற 25ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications