இலங்கை: இந்தியாவின் பங்கு முக்கியம்- ரணில்
டெல்லி:
இந்த அமைதி முயற்சிகளில் இந்தியா மிக முக்கிய பங்காற்றியே ஆக வேண்டும் என இலங்கை எதிர்க் கட்சித் தலைவரும்முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
இலங்கை அமைதி முயற்சிகள் குறித்த டெல்லியில் நடந்த 8வது தினேஷ் சிங் நினைவு உரையாற்றிய விக்கிரமசிங்கேகூறியதாவது:இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட இந்தியாவின் பங்கு மிக மிக அவசியம்.
இப்போது இலங்கையை ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலமே இல்லை. இதனால் அவர்களால் அமைதிப்பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. மக்களின் முழு ஆதரவைப் பெற்ற, புதிய, நிலையான அரசு தான்பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்.
எக்காரணத்தைக் கொண்டும் இலங்கை பிரிவினையை ஏற்க முடியாது. இந்தியாவைப் போல சுயாட்சி கொண்ட மாகாண(மாநில) அரசுகளை அமைப்பதே பிரச்சனைக்குத் தீர்வு காண சரியான வழி.
விடுதலைப் புலிகளுடனான எங்களது முந்தைய அனுபவத்தை வைத்துத் தான் அரசியல்ரீதியில் பிரச்சனைக்குத் தீர்வு காணமுயன்றோம். இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் எடுத்த முந்தைய முயற்சிகள் பலனளிக்கவில்லை.நாங்கள் எல்லோருமே தவறுகள் செய்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
வழக்கமான தீர்வுகளை வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை அணுகக் கூடாது. புதிய வகையான அணுகுமுறைகள் மூலமேசிக்கலைத் தீர்க்க முடியும். இந்த அமைதி முயற்சிகளில் இந்தியா மிக முக்கிய பங்காற்றியே ஆக வேண்டும்.
புலிகளுடனான அதிகாரப் பகிர்வு குறித்த அறிக்கையை தயார் செய்ய இந்தியா தந்த யோசனைகள் மிகச் சிறப்பானவை. அமைதிமுயற்சிகள், பேச்சுவார்த்தைகள் செல்லும் திசை குறித்து இந்தியாவிடம் அவ்வப்போது விவரங்களை அளித்தே வந்தோம்.
பேச்சுவார்த்தைகள் நீடிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக இருந்தது. இந்தியா தங்களுக்கு எதிரான ஒரு நாடு என்றகருத்து இலங்கை ஆட்சியாளர்களிடம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இது உண்மையல்ல.
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படுவது தான் இலங்கையின்பொருளாதாரத்துக்கும் நல்லது. அதே நேரத்தில் இலங்கையின் தனித்தன்மையும், அரசியல் சுதந்திரமும் பாதுகாக்கப்படவேண்டும்.
இந்திய-இலங்கை நல்லுறவு மற்ற இரு நாடுகளுக்கு ஒரு முன்னுதாரமான உறவாகும் வகையில் வளர வேண்டும் என்றார் ரணில்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications