இட ஒதுக்கீடு: 2 மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
கோவை:
தனியார் சுய நிதி பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம்அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது 2மாணவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தமாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். சட்டக் கல்லூ மாணவர்கள்இப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இன்று 3வது நாளாக போராட்டம் நடந்தது. கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 2 மாணவர்கள் தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸார் இரு மாணவர்களையும் தடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில்இருந்த காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications