மதானியின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் கைதியான கேரள மக்கள்ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.இந்த சம்பவம் தொடர்பாக அல்-உம்மா தலைவர் பாட்ஷா, மதானி உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.இவர்களில் மதானி தன்னை ஜாமீனில் விடக் கோரி கடந்த 7 ஆண்டுகளாக கோவை நீதிமன்றம் முதல் சென்னைஉயர்நீதிமன்றம் வரை பல்வேறு நீதிமன்றங்களில் மனு செய்தார். அனைத்து மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மதானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தான் உடல்நலமின்றி இருப்பதாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு வசதியாக தன்னை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று மதானி கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் சேமா, ஸ்ரீகிருஷ்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, மதானிக்கு உடல் நலம் சரியாகி விட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்று கூறி அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டனர். மதானியின் ஜாமீன்மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம் ஜாமீனில் வெளிவருவதற்கான கடைசி வாய்ப்பும் மதானிக்கு இல்லாமல் போய் விட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications