டெல்லி: தயாநிதி மாறன் வீட்டில் பயங்கரம்- சக காவலரை சுட்டுக் கொன்ற காவலர்
டெல்லி:
டெல்லியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்தியப் படையைச் சேர்ந்த வீரர்ஒருவர் தனது சக வீரரை சுட்டுக் கொன்றார்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் வீடு டெல்லி அக்பர் ரோட்டில் (எண்-6) உள்ளது. இங்கு மத்தியரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் படையின் தலைமைக் காவலர் சுரேஷ் டோக்ரா. அவருக்குக் கீழ் பணி புரிபவர் காவலர் கணேஷ். இதில் சுரேசின்செயல்பாடுகள் குறித்து துறைரீதியிலான விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் கணேசும் ஒரு சாட்சியாகவிசாரிக்கப்பட்டு வந்தார்.
இந் நிலையில் இன்று மாறனின் வீட்டு வாசலில் காவல் காக்கும் பணியை முடித்துவிட்டு கணேஷ் காலை 7.30 மணிக்கு கார்ட்ரூமுக்குத் திரும்பினார். அப்போது அங்கிருந்த சுரேசுக்கும் கணேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் வலுத்ததையடுத்து கோபமடைந்த கணேஷ் தனது துப்பாக்கியால் தனது தலைமைக் காவலர் சுரேஷை சுட்டார்.இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பலியான சுரேசின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் மிக முக்கிய விவிஐபிக்கள் தங்கியுள்ள உயர் மட்டப் பாதுகாப்பு மிகுந்த அக்பர் ரோட்டில் நடந்துள்ள இச் சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications