தமிழக ரயில்வேயை கட்டுப்படுத்தும் கேரளம்!
டெல்லி:
கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாகப் பிரித்து சேலம் நகரை தலைமையிடமாகக் கொண்டு புதியரயில்வே கோட்டம் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படடு வருவதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில்வேயின் பல பகுதிகள் பாலக்காடு கோட்டத்தில் தான் உள்ளன. இங்கு கேரள நபர்களின் ஆதிக்கம் உள்ளது.இதனால் தமிழக ரயில் திட்டங்களுக்கு இந்தக் கோட்டம் முன்னுரிமை தராமல் கேரளத்தை கவனிப்பதிலேயே குறியாக உள்ளது.மேலும் நிர்வாகரீதியிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகின்றன. தமிழகத்துக்குள் ரயில்வே துறையை கேரளத்தில் உள்ளபாலக்காட்டு அதிகாரிகள் கட்டுப்படுத்துவதால் பல விஷயங்களில் பிரச்சனை உருவாகி வருகிறது.
இதையடுத்து பாலக்காடு கோட்டத்தில் உள்ள தமிழக ரயில்வே பகுதிகளை தமிழக கோட்டத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு லாலு பதிலளிக்கையில், சேலம் நகரைத்தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டத்தை அமைப்பது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலிக்க ரயில்வேஅமைச்சகம் தயாராக உள்ளது.
இருப்பினும், இதுதொடர்பாக கேரள மற்றும் தமிழக அரசுகள் மனவந்து சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்படித்தெரிவித்தால் சேலம் ரயில்வே கோட்டத்தை உருவாக்குவதில் ரயில்வே துறைக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது என்றார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, ஈரோடு, சேலம் ஆகியவை தற்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளரயில்வே கோட்டத்தின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications