காதலனுடன் மகள் ஓட்டம்: தந்தை, தாய் உள்பட 4 பேர் தற்கொலை
வேலூர்:
திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் மகள் ஓடிப் போனதால் அவமானமடைந்த பெண்ணின் தாய், தந்தை உள்பட ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள அகரவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 45). பேருந்து ஓட்டுநராகஉள்ள ஜோதியின் மனைவி மலர் (41). இவர்களுக்கு மேகலா (19), அம்பிகா (16), மகாலட்சுமி (12), வெங்கடேசன் (10) என்றகுழந்தைகள் உள்ளனர்.மேகலாவுக்கு இன்று (வியாழக்கிழமை) நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆனால் அவர் தன்னுடன் வேலை பார்த்து வந்தசண்முகம் என்பவரைக் காதலித்துள்ளார். இதை வீட்டினர் எதிர்த்து வந்துள்ளனர்.
இதையடுத்து நிச்சயதார்த்தத்தை விரும்பாத மேகலா, சண்முகத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் மகள், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால் ஜோதி மற்றும்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தங்களுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதிய அவர்கள்தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து விஷம் வாங்கி வந்த ஜோதி அதை மனைவி, குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் குடித்தார். சிறிது நேரத்தில் 5பேரும் மயங்கி விழுந்தனர். இவர்களது கோலத்தைப் பார்த்து பதறிப் போன அக்கம் பக்கத்தினர் ஐந்து பேரையும் வேலூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே மகாலட்சுமியைத் தவிர மற்ற நான்கு பேரும் பரிதாபமாக இறந்தனர். மகாலட்சுமியும் உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போன மேகலாவையும், அவரது காதலனையும் கண்டுபிடிக்க போலீஸார் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications