இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மீது வங்கதேச படையினர் திடீர் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது வங்கதேச எல்லைப் படையினர் திடீரென கண்மூடித்தனமான தாக்குதல்நடத்தினர். இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்திய-வங்கதேச எல்லை கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமாகவே இருந்து வருகிறது. இந்தியப் படையினர் மீதுபங்களாதேஷ் ரைபிள்ஸ் வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்துவது வழக்கமாகி வருகிறது.

இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தினரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தும்போது இருதரப்பினருக்கும் பிரச்சனை உருவாகி வருகிறது. மேலும் வங்கதேசம்-இந்தியா இடையே நதி நீர் பகிர்வு விஷயத்திலும் கருத்துவேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இந்த முறை நதி நீர் விஷயத்தில் தான் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

எல்லையில் உள்ள மகாநந்தா நதியை ஒட்டிய பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து கொண்டுள்ளது. இந்தப்பணியை தடுக்கும் நோக்கில் தான் வங்கதேசப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் எல்லைக் கண்காணிப்புக்குச் சென்ற இந்தியப் படையின் சிறிய குழுவினரைக் கடத்திச் சென்ற வங்கதேசவீரர்கள் அவர்களை கட்டி வைத்து, சுட்டுக் கொன்று, உடல்களை சிதைத்து இந்தியாவிடம் தந்தனர்.

அந்தச் சம்பவத்தையடுத்து எல்லையில் தொடர்ந்து பதற்றமே நிலவி வந்தது. இந் நிலையில் மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேசஎல்லையான ஆதம்பூர், முசியா ஆகியா இடங்களில் இன்று இந்தியப் படையினரை நோக்கி வங்கதேசப் படையினர் திடீரெனதுப்பாக்கிச் சூடு நடத்தினர்.

காலை 10.10க்கு இந்தத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடுமையான பதில்தாக்குதலில் இறங்கினர். இரு தரப்பிலும் 1 மணி நேரம் துப்பாக்கிச் சூடு நீடித்தது.

இதில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட்டதா, எத்தனை பேர் காயமடைந்தனர் என்று உடனடியாகத் தெரியவில்லை.ஆனால் எல்லைப் பகுதி கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு படையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+