ஊழல் அதிகாரிகள்: பொது மக்களிடம் இருந்து தகவல் பெற சிபிஐ திட்டம்
டெல்லி:
அரசு அலுவலகங்களில் ஊழலைக் கட்டுப்படுத்த பொது மக்களின் உதவியைப் பெற சிபிஐ முடிவு செய்துள்ளது.
ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்த விவரங்களை பொது மக்களிடம் இருந்து இ-மெயில், தொலைபேசி, கடிதங்கள் மூலம்பெறும் புதிய நடைமுறையை அமலாக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.இந்தப் புகாரைக் கொடுப்பவரின் பெயர் வெளியிடப்படாது. வரும் புகார்கள் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தவுள்ள சிபிஐபுகார் உண்மையானால் ரெய்ட் உள்பட சட்டரீதியிலான நடவடிக்கைகளில் இறங்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சிபிஐயின் இயக்குனராக இருந்த பி.சி.சர்மா தான் ஊழல் அதிகாரிகளின் வீடுகளிலும்அலுவலகங்களிலும் ரெய்ட் நடத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார்.
அவரது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் சிக்கினர்.ஊழலைக் கட்டுப்படுத்த பொது மக்களிடம் இருந்து புகார்கள் வாங்கலாம் என்ற யோசனையையும் அவர் முன் வைத்தார்.
இப்போது அவரது யோசனைக்கு வடிவம் கொடுக்கும் முயற்சிகளில் சிபிஐ இறங்கியுள்ளது.
இதற்கிடையே நாட்டில் போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளின் உளவுப் பிரிவுகளின்உதவியை சிபிஐ நாடியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications