கடற்படை ஹெலிகாப்டர் விழுந்து 4 பேர் பலி
டெல்லி:
இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 4 வீரர்கள் பலியாகிவிட்டதாகத்தெரிகிறது.
கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே மலைப் பகுதியில் இந்த விபத்து நடந்தது. கமோவ்-28 என்ற நீர்மூழ்கிகளைத் தாக்கிஅழிக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர் பகல் 12 மணியளவில் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது.கோவாவில் இருந்து காலை 11.50 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் கிளம்பியது. ஹைதராபாத் வழியாக விசாகபட்டிணம்கடற்படைத் தளத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டரில் 6 வீரர்கள் இருந்தனர்.
10 நிமிடம் பயணம் செய்த நிலையில் பெல்காமின் கானாபூர் மலைப் பிரதேசத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்துநொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 வீரர்கள் பலியாகிவிட்டனர். இருவர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்த தகவலைத் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு கடற்படை ஹெலிகாப்டர்கள் விரைந்தன.
ஆனால், கடும் மழை பெய்து வருவதால் அந்த ஹெலிகாடர்களால் சம்பவ இடத்தில் தரையிறங்க முடியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications