போலீஸ் காவலில் இருந்தவரை மீட்ட வழக்கு: நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வாக்குச் சாவடியில் போலீஸ் காவலில் இருந்த தனது ஆதரவாளரை அதிரடியாகப் புகுந்து, அடாவடியாக மீட்டுச் சென்றதாகதொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜரானார்.

கடந்த 1999ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தினகரன், திமுகவேட்பாளர் செல்வேந்திரன் ஆகியோரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி சார்பில் மன்சூர் அலிகான் நிறுத்தப்பட்டார்.

வாக்குப் பதிவு தினத்தன்று, எழுமலை, கோட்டைப்பட்டி வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போட்டதாக புதிய தமிழகம்கட்சியைச் சேர்ந்த சீனிமுத்து என்பவரை போலீஸார் பிடித்து வாக்குச் சாவடியில் போலீஸ் காவலில் வைத்தனர்.

தகவல் அறிந்த நடிகர் மன்சூர் அலிகான் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.பின்னர் சீனிமுத்துவை தானே மீட்டுக் கொண்டு சென்று விட்டார்.கொக்கு சுடும் துப்பாக்கிகள், லத்தி கம்புகளுடன் அங்குபாதுகாப்புக்கு இருந்த போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

இதையடுத்து மன்சூர் அலிகான் மீது போலீஸார் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 224ன் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குஉசிலம்பட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்த மன்சூர் அலிகான், சீனிமுத்து ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அப்போது, போலீஸ் சார்பில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது.

அதில், கைது செய்வதைத் தடுத்தல் என்ற பிரிவின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை,போலீஸ் காவலில் இருந்தவரை மீட்டுச் செல்லுதல் பிரிவின் கீழ் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி அமராவதி ஒத்திவைத்தார்.

பின்னர் வெளியே வந்த மன்சூர் அலிகான் நிருபர்களிடம் பேசுகையில், நான் ஒரு தவறும் செய்யவில்லை, என் மீது வழக்குப்போட்டு விட்டார்கள். இப்போது மெட்ராஸ் ஐ வந்திருப்பதால் கண்ணாடி போட்டுள்ளேன். இதற்கும் கூட ஏதாவது வழக்குப்போட்டாலும் போடுவார்கள் நம்ம போலீஸார் என்று கிண்டலடித்தபடியே காரில் ஏறிச் சென்றார்.

என்ன இருந்தாலும் மன்சூருக்கு சேட்டை ரொம்ப ஜாஸ்தி...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+