மேட்டூர் அணை நிரம்புகிறது: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. இன்று இரவில் அணை நிரம்பிவிடும் என்பதால் அணையில் இருந்து நீர்வேகமாதத் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த அணை நிரம்புவது இது 37 வது முறையாகும். கர்நாடகத்தில்காவிரி நதியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளைப்பாதுகாக்க உபரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.

Mettur Dam

அணையின் மொத்த கொள்ளவு 120 அடியாகும். இப்போது நீர் மட்டம் 118.79 அடியை எட்டிவிட்டது. அணையில் இப்போது91.554 டி.எம்.சி. நீர் உள்ளது. அதிகபட்சமாக 93.4 டி.எம்.சி. நீரைத் தான் தேக்க முடியும்.

இப்போது வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு தொடர்ந்தால் அணை இன்று நள்ளிரவில் நிரம்பிவிடும். இதனால் அணையில்இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரவில் ஒரே நேரத்தில் 60,000 கன அடி நீர் திறந்துவிடப்படும் சூழல்உள்ளது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரிக் கரையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அணையில் இருந்து காற்று வெளியாகும் துளைகளில் இருந்து நீர் கசிவது அதிகரித்து வருவதால் அணையின்ஸ்திரத்தன்மை குறித்தும் அச்சம் எழுந்துள்ளது. இதனால் அணையை பொதுப் பணித்துறையை தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+