இட ஒதுக்கீடு: சட்ட திருத்தம் குறித்து 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
டெல்லி:
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வரும் 23ம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த உத்தரவை விமர்சித்துள்ளன.இக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என திமுக கூட்டணி உள்ளிட்ட பலகட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. திமுக சார்பில் இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வரப்ப்பட்டது.
இதையடுத்து இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கூட்டியுள்ளார்.
இது குறித்து சிங் கூறுகையில், உச்ச நீதிமன்றத்துடன் மத்திய அரசு மோதல் போக்கை மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில்தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல்வே இக் கூட்டம் கூட்டப்படுகிறது.
இட ஒதுக்கீடு குறித்த தனது நிலையை மத்திய அரசு அக் கூட்டத்தில் விளக்கும். மேலும் இக் கல்லூரிகளின் கட்டணம் குறித்தும்விவாதிக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications