புயல் வேக கல்வித்துறை: குழப்பத்தில் பள்ளிகள், கலக்கத்தில் பெற்றோர்
சென்னை:
அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்த 3,200 நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குமா இல்லையாஎன்று தெரியாததால் அதில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கும்பகோணத்தில் ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தையடுத்து அனைத்துப் பள்ளிகளையும் சீரமைக்கவும், பாதுகாப்புடன் அவற்றைமாற்றிக் கட்டவும் தமிழக அரசு உத்தரவிட்டது.மேலும் கல்வித்துறையின் அங்கீகாரம் பெறாமல் ஆங்காங்கே புற்றீசல் மாதிரி முளைத்த 3,200க்கும் அதிகமான நர்சரி மற்றும்ஆரம்பப் பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நர்சரி பள்ளிகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அங்கீகாரம் பெற 3 மாதம் கெடு விதித்தது. இந்தக் கெடு வரும் 31ம் தேதியுடன்முடிவடைகிறது.
இந் நிலையில் அரசின் அங்கீகாரம் கோரி 3,200 நர்சரி, ஆரம்பப் பள்ளிகளின் நிர்வாகிகள் தமிழக அரசிடம் மனு செய்தன.இந்தக் கல்வி நிலையங்களை கல்வித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால், அதில் சுறுசுறுப்பு இல்லை.
விண்ணப்பம் செய்த பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் கல்வி அதிகாரிகள் வரவே இல்லை. அதைவிட மோசம், ஆய்வுநடத்தப்பட்ட பள்ளிகளில் ஒரு பள்ளிக்குக் கூட கல்வித்துறையின் அனுமதிக் கடிதம் கிடைக்கவில்லை.
ஆய்வு முடிந்தும் இன்னும் அனுமதி கிடைக்காத கலக்கத்தில் ஒரு பிரிவு பள்ளிகளின் நிர்வாகிகளும், இன்னும் ஆய்வுக்கேஅதிகாரிகள் வராததால் பெரும் கலக்கத்தில் இன்னொரு பிரிவு பள்ளிகளின் நிர்வாகிகளும் உள்ளனர்.
அதிகாரிகள் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில் உயர் நீதிமன்றம் விதித்த கெடு வேறப நெருங்கிக் கொண்டிருப்பதால்பள்ளி நிர்வாகங்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன. அவர்களை விட அதில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இன்னும் 12 தினங்களில் நீதிமன்றத்தின் கெடு முடியப் போகும் நிலையில் எந்தெந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாமல்போகுமோ, எந்தெந்த பள்ளி மூடப்படுமோ தெரியவில்லை.
தங்கள் குழந்தை படிக்கும் பள்ளி இருக்குமா இருக்காதா, அவர்களுக்கு புதிதாக வேறு பள்ளிகளில் இடம் பிடிக்க வேண்டியநிலை வருமா வராதா என்று தெரியாமல் பெற்றோர் குழம்பிப் போய் உள்ளனர்.
இந்த விஷயத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் கல்வித்துறை தனது வழக்கமான புயல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications