தேரோட்டத்தில் பயங்கரம்: கலசத்தில் மின்சாரம் பாய்ந்து 7 பேர் படுகாயம்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியின்போது தேர் உச்சியில் இருந்த கலசம் மின் கம்பத்தில் உரசியதில்மின்சாரம் பாய்ந்து 7 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தார்கள்.
இதையடுத்து பொது மக்கள் தேவையில்லாமல் துணை மின் நிலையத்தைத் தாக்கி சூறையாடினர்.பண்ருட்டி பாரதி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை தேரோட்டம்நடந்தது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
காலை 11 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. பண்ருட்டி-சென்னை நெடுஞ்சாலையில் தேர் வந்து கொண்டிருந்தது.ஏராளமான பக்தர்கள் தேரை பிடித்து இழுத்து வந்தனர். அப்போது சாலையின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்சாரக் கம்பி,தேரின் உச்சியில் இருந்த கலசத்தில் பட்டது. இதையடுத்து தேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தேரில் அமர்ந்திருந்த 7 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தஅவர்களை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் 3 பேரின் நலை கவலைக்கிடமாகஉள்ளது. அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் தேரின் ஒரு பகுதியும் கருகி விட்டது. இந்த விபத்தையடுத்து கோபமடைந்த மக்தர்கள் அருகில் இருந்த துணைமின் நிலையத்திற்குள் புகுந்து கல்வீச்சிலும், சூறையாடலிலும் இறங்கினர்.
போலீசார் ஓடி வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications