விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரம்
பெங்களூர்:
நேற்று கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படையின்ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டை இன்றும் தொடரந்து நடந்து வருகிறது.
கேவாவில் இருந்து விசாகப்பட்டிணம் கிளம்பிய கமோவ்-28 என்ற நீர்மூழ்கிகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது.கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கானாபூர் மலைப் பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த ஹெலிகாப்டர்விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 வீரர்கள் பலியாகிவிட்டனர். இருவர் பலத்த காயங்களுடன்உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் செல்போன் மூலம் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து விபத்து நடந்த இடத்துக்கு கடற்படை ஹெலிகாப்டர்கள் விரைந்தன. ஆனால், கடும் மழை மற்றும் காற்றுகாரணமாக அந்த இடத்தை அடையாளம் காண முடியவில்லை. மேலும் மீட்பு ஹெலிகாப்டர்களால் அந்த மலைப் பகுதியில்தரையிறங்கவும் முடியவில்லை.
நள்ளிரவு வரை தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மீண்டும் தேடும் பணி தொடங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications