ஜெயேந்திரருக்கு செங்கை நீதிமன்றம் எச்சரிக்கை
செங்கல்பட்டு :
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் வந்தே தீர வேண்டும்.வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அமர்வு நீதிபதி அக்பர் அலி கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சதுர்மாஸ்ய விரதம் இருப்பதாக கூறி திருப்பதியில் போய் தங்கியுள்ளனர். இதனால்விசாரணைக்கு வராமல் உள்ளனர்.
இந் நிலையில் சதுர்மாஸ்ய விரதம் இருப்பதால் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்றுஜெயேந்திரர், விஜயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, இரு சங்கராச்சாரியார்களும் விசாரணைக்கு வராமல் இருப்பதற்கு அரசு வழக்கறிஞர்ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஆமோதித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு வரும்படி அழைத்தால் ஆஜராக வேண்டியதுஅவசியம். அதை யாரும் மீற முடியாது. விலக்கு கேட்பதை அனுமதிக்க முடியாது.
வரும் 31ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் விசாரணைக்கு ஆஜராகியே ஆகவேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் செப்டம்பர் 17ம் தேதிக்கு மேல் வழக்கை ஒத்திவைக்கக கோரினார்.அதை அரசு வக்கீல் எதிர்த்தார்.
இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 24பேரும் வரவேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications