மீராவிடம் சாவ்லா விருது பணத்தை பறிக்க முயலும் பஞ்சாயத்து
கடலூர்:
தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்குரிய ரூ. 5 லட்சம் பணத்தை கிராம பஞ்சாயத்திடம் கொடுக்க மாட்டேன் என இந்தஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற கடலூர் பெண்மணி மீரா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. சுனாமி தாக்குதலின்போது தனது உயிரைப்பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான கிராம மக்களை மீட்டார். இதைப் பாராட்டும் விதமாக அவருக்கு இந்த ஆண்டுக்கானகல்பனா சாவ்லா விருதை தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போதுவழங்கினார்.
தற்போது மீராவுக்கு புதிய பிரச்சினை ஒன்று கிளம்பியுள்ளது. ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் மீராவையும், அவரதுகுடும்பத்தினரையும் அழைத்த ஊர்ப் பெரியவர்கள், கல்பனா சாவ்லா விருது மூலம் கிடைத்த ரூ. 5 லட்சம் பணத்தையும்கிராமத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் மீரா அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது மகளின் படிப்புச் செலவுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரின்சிகிச்சைக்காகவும் விருதுப் பணத்தை செலவிட அவர் திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் ஆலமரத்தடியில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசும் கும்பல் ஒன்று இந்தப்பணத்தைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அந்தக் கும்பலின் தீர்ப்பை மீரா எதிர்த்தார். ஆனால் பணத்தைக் கொடுக்குமாறு அவருக்கு பஞ்சாயத்தார் நெருக்கடி கொடுக்கஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளார் மீரா. இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊர் பஞ்சாயத்து வெட்டிக் கும்பலின் மிரட்டல் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் கொடுத்துள்ளார் மீரா.இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications