ஆசிரியை மாயமான வழக்கில் சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெ. அவசர அழைப்பு
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் தீவிரமான சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.பாப்பா சுந்தரம், முதல்வர் ஜெயலலிதாவின் அழைப்பையடுத்து சென்னை விரைந்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு இறுதியில் காணாமல் போனார்.இந்த வழக்கைசிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.இந்த வழக்கில் வருகிற 22ம் தேதிக்குள் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்படும் என மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இறுதிக் கெடு விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கை சிபிசிஐடி எஸ்.பி. பிரேம்குமார் வசம்தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.
பிரேம்குமாரின் நேரடி மேற்பார்வையில் இவ்வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரேம்குமாரிடம் வழக்கு மாறியபிறகு, மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கத்திற்கு ஒரு திடீர் கடிதம் வந்தது. மீனாட்சி எழுவது போல அந்தக் கடிதம்எழுதப்பட்டிருந்தது.
அதில், தான் சென்னையில் இருப்பதாகவும் செப்டம்பர் 4ம் தேதிக்குள் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும்,இல்லாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை மீனாட்சி எழுதவில்லை என்றும் தன்னைத் திட்டமிட்டு இவ்வழக்கில் சிக்க வைக்க சிபிசிஐடி போலீஸார்மேற்கொள்ளும் சதியின் ஒரு பகுதியே இந்தக் கடிதம் என்றும் ஜோதி ராமலிங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந் நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாஅழைத்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் அவசர அவசரமாக சென்னைக்கு விரைந்துள்ளார்.
வரும் 22ம் தேதியுடன் சிபிசிஐடிக்கு விதிக்கப்பட்டுள்ள கெடு முடிவடைதால், இவ்வழக்கில் இன்னும் சில நாட்களில் முக்கியத்திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பாப்பா சுந்தரம் அவரது மகன் கருணாகரன் ஆகியோரை விசாரிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளைகூறியிருந்ததால் அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பான அறிக்கையும் 22ம் தேதி உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த வழக்கில் பாப்பா சுந்தரத்தைக் காப்பதிலேயே போலீசார் கண்ணும் கருத்துமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்,நீதிமன்றத்தின் தொடர் கண்டிப்பால் வேறு வழியில்லாமல் பாப்பாவை நோண்டி வருகின்றர் போலீசார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications