பிரச்சாரத்துக்கு அம்மா கூப்பிட்டா வருவேன்: விஜயசாந்தி
திருவண்ணாமலை:
அரசியலில் வெற்றி பெற நடிகர் விஜயகாந்த் இன்னும் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நடிகை விஜயசாந்திஅறிவுரை கூறியுள்ளார்.
ஆந்திர சூப்பர் ஸ்டாரினியான விஜயசாந்தி அவ்வப்போது அரசியல் பக்கம் பரபரப்பூட்டுவார். தமிழகத்தில் ரஜினிஅரசியலில் எப்போது குதிப்பார் என்று நீண்ட நெடுங்காலமாக எதிர்ப்பார்ப்பு இருப்பதைப் போல விஜயசாந்தியும் தீவிரஅரசியலில் குதிக்கப் போவதாக சொல்லிக் கொண்டே வந்தார்.பல கால குழப்பத்திற்குப் பிறகு தற்போது ஒரு வழியாக புதிய கட்சியைத் தொடங்கப் போகிறார் விஜயசாந்தி. தெலுங்கானாமாநிலத்தை உருவாக்குவதே லட்சியம் என்ற கோரிக்கையுடன் தனது கட்சியைத் தொடங்குகிறார் விஜயசாந்தி.
இந் நிலையில் திருவண்ணாமலைக்கு வந்த விஜயசாந்தி கிரிவலம் சுற்றினார். பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச்சென்று வழிபட்டார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த விஜயசாந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனது தனிக்கட்சி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிச்சயம் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியே தீருவேன். புதியகட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பேன்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி எனக்கு எப்போதுமே உண்டு. தமிழக சட்டசபைத் தேர்தலில் அம்மா அழைத்தால் நிச்சயம்பிரசாரம் செய்வேன். அதற்கு இன்னும் நாள் உள்ளது.
நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். ஆனால் அரசியலில் வெற்றி பெற விஜயகாந்த் கடுமையாக உழைக்கவேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்றார் விஜயசாந்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications