மனரீதியில் பிரச்சனை: கற்பழிப்பு நாடகமாடிய ஜெர்மன் பெண்
சென்னை:
சென்னை நநிட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்மணி, தன்னை ஹோட்டல் ஊழியர்கற்பழித்து விட்டதாக போலீஸில் புகார் கூறினார். ஆனால் அது உண்மையல்ல என்று தெரிய வந்ததால் பரபரப்பு அடங்கியது.
ஜெர்மனியைச் சேர்ந்தவர் துரின் பெஸ்கா. 46 வயதான இவர் வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.வெள்ளிக்கிழமை இவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். தன்னை ஹோட்டல் ஊழியர் ஒருவர் போதை மருந்துகொடுத்து கற்பழித்து விட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து போலீஸார் உடனடியாக ஹோட்டலுக்கு விரைந்து வந்தனர். பெஸ்காவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது காபியில் போதை மருந்து கலக்கிக் கொடுத்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் தன்னை கெடுத்து விட்டதாக அவர்தெரிவித்தார். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து பெஸ்காவிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில், பெஸ்காவுக்கு போதைமருந்து தரப்பட்டதற்கான அறிகுறியே இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பெஸ்காவிடம் மன நல மருத்துவர்கள் விசாரணை நடத்தினர். உளவியல்ரீதியில் அவரிடம் விசாரணைநடத்தியபோது, அவர் கூறிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்று தெரிய வந்தது.
ஏற்கனவே ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெஸ்கா தங்கியிருந்தபோது, இதேபோல ஒரு குற்றச்சாட்டைக் கூறி அங்கும்பரபரப்பை ஏற்படுத்தியதும் அவரிடம் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு ஏற்பட்டுள்ள மன வியாதியை போலீஸாரும், டாக்டர்களும் பெஸ்காவிடம் விலாவரியாக விவரித்துசமாதானப்படுத்தினர்.
தனது மனரீதியான பிரச்சனையை உணர்ந்து கொண்ட பெஸ்கா, தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் பெங்களூர்செல்ல விரும்பியதால், பெண் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்துக்கு போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications