சென்னை, கடலூரில் தொடர்ந்து இன்றும் கடல் கொந்தளிப்பு: மக்கள் பீதி
சென்னை:
சென்னை எண்ணூ
சென்னையில் கடந்த 2 நாட்களாகவே கடலில் கொந்தளிப்பு காணப்பட்டது. பெளர்ணமி காரணமாக இந்த கடல் கொந்தளிப்புஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும் கூட கடல் நீர் தெருக்களுக்குள் வந்ததால் பொது மக்களிடையே பீதி நிலவி வருகிறது.நேற்று காலையில் இந்தோஷேனியா அருகே கடலுக்கு அடியில் 5.5 என்ற ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்படடது. ஆனால்,இது சுனாமி அலையை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி மிக்கது அல்ல என்பதால் சென்னை, கடலூரைத் தாக்கிய பெரிய அலைகள்சுனாமி அலைகள் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.
சென்னையிலும் கடலூரிலும் வியாழக்கிழமை முதலே கடலில் மாற்றம் காணப்படுவதாக கடலோரப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.அன்று இரவு எண்ணூ
ஆனால் வெள்ளிக்கிழமை இரவு சிவகாமி நகர் உள்ளிட்ட சில இடங்களில் கடல் நீர் பெருத்த சப்தத்துடன் ஊருக்குள் புகுந்துதெருக்களில் ஓடியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர்.
சனிக்கிழமை அதிகாலை நிலைமை சற்று இயல்புக்கு வந்தது. இருப்பினும் காலை 7 மணிக்கு மேல் மீண்டும் கடல் கொந்தளிப்புஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மீண்டும் பீதியில் ஆழ்ந்தனர். பாதுகாப்பானஇடங்களுக்கு குடும்பத்துடன் மீண்டும் இடம் பெயர்ந்தனர்.
சென்னையில் பல இடங்களில் 1 கி.மீ. அளவுக்கு கடல் நீர் உள்ளே வந்தது. ஐஸ் ஹவுஸ் பகுதியில் விவேகானந்தர் இல்லத்துக்குஅருகே வரை கடல் நீர் புகுந்துவிட்டது. எண்ணூர் பகுதியில் பல வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடலூரில் 150 மீனவர்களின்வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
எண்ணூ
இன்று காலை எண்ணூர் அன்னை சிவகாமி நகருக்குள் 3 வது நாளாக தொடர்ந்து நீர் புகுந்தது. மெரீனா, கொட்டிவாக்கம் ஆகியபகுதிகளிலும் கடலின் சீற்றம் மிக அதிகமாக உள்ளது.
அதே போல கடலூரிலும் இன்றும் பல இடங்களில் நீர் புகுந்தது. தேவனாம்பட்டினண், தாழங்குடா, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி ஆகிய இடங்களில் மீனவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர் அலறியடித்துக் கொண்டு வீடுகளைக் காலிசெய்தனர்.
இதேபோல கடலூரிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. சென்னை நகரில் மெரீனா கடற்கரை, கொட்டிவாகமக் உள்ளிட்டபகுதியிலும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் சுமார் 1 கி.மீ. தூரம் வரை உள்ளே புகுந்தது.
பெளர்ணமி, அமாவாசை தினங்களில் வழக்கமாக கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்றாலும் பெளர்ணமி முடிந்தும் கடல்கொந்தளிப்பு தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் பீதி அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications