54 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
54 புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இவ்வருடம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்12,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள். இந்த தகவல் ராஜ்ய சபாவில் இன்று தெரிவிக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பத்மி, எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில், தற்போதுஇந்தியாவில் 1,360 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதிபெற்று இயங்கி வருகின்றன.இவற்றில் 4,45, 183 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது 2005- 06ம் ஆண்டில் மேலும் 54 புதிய பொறியியல் மற்றும்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 12,000 மாணவர்கள் பயில வசதிஏற்படுத்தப்படும்.
இது தவிர 50 கேந்திர வித்யாலயாக்களை தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications