நடுக்கடலில் தமிழக, ஆந்திர மீனவர்கள் மோதல்
சென்னை:
சென்னை மற்றும் ஆந்திர மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த30க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திர எல்லை அருகே தமிழக கடற்பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். திடீர் திடீரென ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவர்களை தாக்கி பணம், மீன்கள் மற்றும் படகுகளைகொள்ளையடித்துச் செல்வது வழக்கம்.இந் நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் காசிமேடு பகுதியை சேர்ந்த 24 மீனவர்கள் ஆந்திராவிலுள்ள மண்ணூர் என்றஇடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர்.
இந்த தகவல் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற தமிழக மீனவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆந்திரமீனவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். படகுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் 13 ஆந்திர மீனவர்களை தமிழக மீனவர்கள் சிறை பிடித்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.ஆந்திர மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டது அறிந்ததும் துறைமுகத்தில் காசிமேடு பகுதி மீனவர்கள் குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் அங்கு போலீஸார் விரைந்து வந்து மீனவர்களை கலைந்துபோகச் செய்தனர். காசிமேடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications