ஹெலிகாப்டர் விழுந்த இடம்: கண்டுபிடிப்பதில் சிக்கல்
பனாஜி:
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக வெளியான தகவலை இந்திய கப்பற் படை மறுத்துள்ளது.
கோவாவிலிருந்து இந்திய கப்பற் படைக்கு சொந்தமான காமோவ்-28 ரக விமானம், கடந்த 19ம் தேதி காலை 11. 50மணியளவில் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது. இதில் அதிகாரிகள் உட்பட 6 பேர் இருந்தனர்.கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கானாப்பூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பறந்து கொண்டிருந்த போது திடீரெனஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதில் 2 பேர் குதித்து தப்பிவிட்டதாகவும், மற்ற 4 பேர் விபத்தில் பலியாகி விட்டதாகவும்தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் தனது செல்போன் மூலம் விபத்து குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
விபத்து குறித்து அறிந்ததும், ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டு பிடிக்கும் பணியிலும், உயிரோடுஇருப்பவர்களை தேடும் பணியிலும் விமானப் படை, கப்பற் படை, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் போலீஸார்உட்பட 700 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் விபத்து நடந்து 3 நாட்களாகியும் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை கப்பற் படைமறுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவெளியான தகவலில் உண்மையில்லை. விபத்து நடந்த இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் விமானப் படை, கப்பற் படை,கடலோர பாதுகாப்புப் படை மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்புப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வீரர்கள்தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications