ஸ்கேனிங் சென்டர்கள்-டாக்டர்கள் கூட்டு கொள்ளை- வருமான வரித்துறை ரெய்டு
மதுரை:
மதுரையில் பல தனியார் மருத்துவமனைகள், அதை நடத்தும் டாக்டர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடிசோதனை நடத்தி ரூ. 1.5 கோடி பணத்தையும், மேலும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்கள், வங்கிக் கணக்குகள்,முதலீடுகள் குறித்த ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
மருத்துவ ஸ்கேனிங் மையங்கள் நடத்தும் உரிமையாளர்கள், டாக்டர்களின் வீடுகளிலும் இச் சோதனைகள் நடந்தன.நேற்றிரவில் இந்த சோதனைகள் தொடங்கின. ஒரே நேரத்தில் இந்த டாக்டர்களின் வீடுகள், மருத்துவமனைகள், ஸ்கேனிங்சென்டர்களில் நுழைந்த வருமான வரித்துறையினர் விடிய, விடிய சோதனை நடத்தினர்.
குறிப்பாக மூளை நரம்பியல் மருத்துவர்கள், புற்று நோய் மருத்துவர்கள், எலும்பு சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் தான் இந்தச்சோதனைகளுக்கு உள்ளாயினர். 130 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி ரெய்டில் ஈடுபடுத்தப்பட்டனர். 18குழுக்களாக சென்று இவர்கள் சோதனை நடத்தினர்.
நேற்று இரவில் ஆரம்பித்த இந்தச் சோதனைகள் இன்று காலையில் தான் முடிவடைந்தன.
மதுரையில் கோடிக்கணக்கில் பணம் ஈட்டி வரும் இந்த தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள் உரிய வருமான வரியைசெலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.
மேலும் காய்ச்சல் அடித்தாலும், வாந்தி எடுத்தாலும் கூட ஸ்கேன் செய்துவிட்டு வருமாறு பரிந்துரைக்கின்றனர். தேவையேஇல்லாமல் எதற்கெடுத்தாலும் ஸ்கேனிங் சென்டர்களுக்கு அனுப்புவதை இந்த டாக்டர்கள் வழக்கமாக்கி வருகின்றனர்.
ஸ்கேனிங் சென்டர்களில் இருந்து இவர்களுக்கு 20 முதல் 60 சதவீதம் வரை கமிஷன் கிடைத்து வருவதால் நோயாளிகளைஸ்கேனிங் செய்ய வைத்து காசு பறித்து வருகின்றனர்.
ஸ்கேனிங் சென்டர்களில் இருந்து தங்களுக்குக் கிடைக்கும் கமிஷனை இவர்கள் வருமானக் கணக்கில் காட்டுவதில்லை. கருப்புப்பணமாகவே அதை குவித்து வருகின்றனர்.
இது குறித்து வந்த புகார்களை அடுத்து இந்த டாக்டர்களின் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் சென்டர்களை ஒரேநேரத்தில் சோதனையிடமாறு வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் சந்தோஷ் தத்தா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்தே இந்தச் சோதனைகள் நடந்தன என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த சோதனையின்போது ஒரு எலும்பு சிகிச்சை டாக்டரின் வீட்டில் இருந்து ரூ. 33 லட்சம் பிடிபட்டது. நரம்பியல்நிபுணரின் வீட்டில் ரூ. 20 லட்சம் பிடிபட்டது. பிற டாக்டர்களின் வீடுகளிலும் ரூ. 1 கோடி வரை கிடைத்தது. இந்தப் பணத்துக்குஇவர்களிடம் எந்தக் கணக்கும் இல்லை.
மேலும் பல கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், சேமிப்பு பத்திரங்கள்ஆகியவையும் பிடிபட்டன.
ஸ்கேனிங் சென்டர்களில் கைப்பற்ற ஆவணங்களின் மூலம் டாக்டர்களுக்கு 60 சதவீதம் வரை கமிஷன் தரப்பட்டுள்ளதும்,நோயாளிகள் பிழியப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.
ஸ்கேனிங் சென்டர்களின் இந்த கமிஷன் மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications