முத்திரைத்தாள் மோசடி: டிஜிபி ரமணி சஸ்பெண்ட் ஆகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தமிழக காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபி ரமணியிடம் விளக்கம் கேட்டு தமிழகஅரசின் உள்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் விரைவில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

பல ஆயிரம் கோடி ரூபாய் போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கி சிபிசிஐடி டிஐஜியாக இருந்த முகம்மது அலி,சென்னை மாநகர உதவி ஆணையராக இருந்த சங்கர், மதுரை எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகம்மது அலியும், சங்கரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபிஅமித் வர்மா, ரயில்வே ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் ஆகியோரது பெயர்களும் அடிபட்டன.

இவர்களில் அமித் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பு ஏதும் கொடுக்காமல் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் காவலர் பயிற்சிக்கான டிஜிபியாக உள்ள ரமணிக்கும், முத்திரைத் தாள் மோசடிக்கும் உள்ள தொடர்பு குறித்துவிசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் அளித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, முதல் கட்டமாகவிளக்கம் கேட்டு டிஜிபி ரமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ரமணியின் பெயர் ஆரம்பத்தில் இருந்தே அடிபட்டு வந்தது. ஆனால், போயஸ் கார்டனுக்கு நெருக்கமானஅதிகாரியாக இருந்ததால் இதுவரை தப்பி வந்தார். மத்திய புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியால் இப்போது தான் ரமணிமீது கை வைக்கிறது தமிழக அரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+