திருட்டு விசிடி: குண்டர் சட்டத்தில் கைதானவர் விடுதலை
சென்னை:
திருட்டு விசிடி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட வியாபாரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்றுசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
சென்னை பாரிமுனைப் பகுதியில் மின்னணுப் பொருட்கள் வியாபாரம் செய்து வருபவர் தெளலத் ரஹ்மான். இவர் கடந்த மார்ச்மாதம் புதிய தமிழ்ப் படங்களின் திருட்டு விசிடிக்களை விற்று வந்ததாக கூறி போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டஒரு வாரத்தில் ரஹ்மானை குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.இதையடுத்து தனது மகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து ரஹ்மானின் தந்தை முகம்மது காசிம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.டி.தினகரன், கிருஷ்ணன் ஆகியோர்முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஒரு படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர், படத்தை வெளியிடும்போதுஅப்படத்திற்கான வெளிநாட்டு உரிமையை விற்று விடுகிறார். அப்படி விற்கப்படும் படத்தின் வெளிநாட்டுப் பிரதியிலிருந்துதயாரிக்கப்படும் விசிடிக்கள்தான் விற்பனைக்கு வருகின்றன.
எனவே இப்படிப்பட்ட விசிடிக்களை விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது, இதுசட்டவிரோதமானதாகும் என்று வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள், ரஹ்மானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று உத்தரவிட்டனர். மேலும், ரஹ்மானைவிடுதலை செய்யுமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
திருட்டு விசிடி விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்புஉத்தரவிட்டார். திரைத் துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை ஜெயலலிதா பிறப்பித்தார். இதைத் தொடர்ந்துதிருட்டு விசிடி விற்றவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அப்படிக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுதலையாகியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications